Tuesday, April 7, 2020

ஜனாதிபதியின் விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்

ஜனாதிபதியின் விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்


அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07), செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.

அதில் சுகாதார துறை சம்பந்தமான பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்டில் உள்ள சகல திறக்கப்பட வேண்டும்.

2. சகல ஆயர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும்.

3. சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல்.

4. கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்கட்டையை இறக்குமதி செய்தல்.

5. ஆயூர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் என்பனவாகும்.
குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!!

குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!!


பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் குருநாகலை மாவட்ட பிரதானி, சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் அசங்க நந்தசிறி அவர்களின் செயற்படுத்தலின் அடிப்படையில் அம்மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்கள் அதிகார சபைக்கு கிடைக்கபெற்ற பாவனையாளர் முறைப்பாடுகளின் அடிப்படையில் நிகவெரெடிய மற்றும் அதை அண்டியுள்ள பிரதேசங்களில் புலனாய்வு நடவடிக்கைகளில் நேற்று முன்தினம் (06) ஈடுபட்டார்கள்.

இதன் போது மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை சீமெந்து அதிக விலைக்கு விற்ற விற்பனையாளர் ஒருவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு பாவனையாளர்களிடம் மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.