all

Tuesday, April 7, 2020

ஜனாதிபதியின் விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்

ஜனாதிபதியின் விசேட செயலணியின் விசேட தீர்மானங்கள்


அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டம் நேற்று (07), செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.

அதில் சுகாதார துறை சம்பந்தமான பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்டில் உள்ள சகல திறக்கப்பட வேண்டும்.

2. சகல ஆயர்வேத மருந்தகங்களும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்திலும் திறக்கப்பட வேண்டும்.

3. சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரு மருந்தகம் அல்லது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது நடமாடும் சேவையை முன்னெடுக்கவும் அனுமதியளித்தல்.

4. கொத்தமல்லி, இஞ்சி மற்றும் வெனிவெல்கட்டையை இறக்குமதி செய்தல்.

5. ஆயூர்வேத சிகிச்சையை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துகளை அஞ்சல் மூலம் பெற வழியேற்படுத்தி கொடுத்தல் என்பனவாகும்.
குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!!

குருநாகல் நிகவெரெடிய பகுதியில் பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் திடீர் விஜயம்!!!


பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் குருநாகலை மாவட்ட பிரதானி, சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் அசங்க நந்தசிறி அவர்களின் செயற்படுத்தலின் அடிப்படையில் அம்மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்கள் அதிகார சபைக்கு கிடைக்கபெற்ற பாவனையாளர் முறைப்பாடுகளின் அடிப்படையில் நிகவெரெடிய மற்றும் அதை அண்டியுள்ள பிரதேசங்களில் புலனாய்வு நடவடிக்கைகளில் நேற்று முன்தினம் (06) ஈடுபட்டார்கள்.

இதன் போது மொத்த மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை சீமெந்து அதிக விலைக்கு விற்ற விற்பனையாளர் ஒருவர் கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு பாவனையாளர்களிடம் மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்தை மீள பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Friday, September 22, 2017

ரணிலை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் - தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா

ரணிலை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் - தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா


நாட்டில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதை காணக்கூடியதாக இருப்பதாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார்,

பொருளாதார, இனவாத, மதவாத பிரச்சினைகள் தலைதுாக்கியுள்ளது, களவு செய்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, வெளிநாடுகளுக்கு இலங்கை சோரம் போயுள்ளது இதுவெல்லாம் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் செயலாகும்.

இதற்கெல்லாம் காரணம் ரணில் எனும் தனி ஒருவர்தான் இவரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என்று குறிப்பிட்டார்.
வடமாகாண சபையின் அடுத்த முதல்வலர் இளஞ்செனியன் ஐயாதான்! மக்கள் ஊகம்

வடமாகாண சபையின் அடுத்த முதல்வலர் இளஞ்செனியன் ஐயாதான்! மக்கள் ஊகம்


மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஓரே தினத்தில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த வடமாகாண சபையின் முதல்வராக நீதிபதி இளஞ்செழியன் ஐயாவை நியமிக்குமாறும் தேர்தலில் களமிற்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் மக்கள் கேட்டுள்ளனர்.

வடமாகாணத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒருவரே இன்று தேவை, அதே போல வடமாகாணத்தை துன்பியலில் இருந்து காப்பாற்றவும் வேண்டும், அதை செவ்வனே ஐயா செய்வார் எனவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்
800 குழந்தைகளுடன் IS தீவிரவாதிகளின் 500 மனைவிமாரை நாடுகடத்த திட்டம்

800 குழந்தைகளுடன் IS தீவிரவாதிகளின் 500 மனைவிமாரை நாடுகடத்த திட்டம்

ஈராக்கில் 800 குழந்தைகளுடன் பிடிபட்ட இஸ்லாமிய அரசு (.எஸ்களின் 500 மனைவிமார்களைநாடு கடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஈராக்கில் .எஸ் கோட்டையாக இருந்த மொசூல் நகரை அந்நாட்டு படைகள் கடந்த ஜூலையில்கைப்பற்றிய பின் அங்கு பிடிபட்ட இந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தால் கைப் மையத்தில் ஈராக்கிய பாதுகாப்பு படைகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதோடு இந்த விடயம் பற்றி விசாரணைகளுக்கு பின் இவர்கள்நாடுகடத்தப்படுவார்கள் என்று நின்வேஹ் மாகாண கவுன்ஸில் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாஆசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நாடுகளின் 509 பெண்கள் மற்றும் 813சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ஈராக்கின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர்குறிப்பிட்டுள்ளார்.
இதில் சுமார் 300 பேர் வரை துருக்கி நாட்டவர்கள் என்று அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்
மஹிந்தவின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

மஹிந்தவின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் நுழைய முயன்றவரை எதிர்வரும்ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வவாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த  ஒருவரை பாதுகாப்பு பிரிவினர் நேற்று கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அக்டோபர் 3இல் பாராளுமன்ற விசேட அமர்வு

அக்டோபர் 3இல் பாராளுமன்ற விசேட அமர்வு

பாராளுமன்றத்தில் விசேட அமர்வு அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி பிற்பகல் 3.30 க்கும் 4.30 க்கும்இடைப்பட்ட காலப்பகுதியில்  இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த விசேட அமர்வுஇடம்பெறஇருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் நேற்று இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது .

இதற்கமைவாக இம்மாதம் 26ஆம் திகதியும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியும் பிற்பகல்1.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி வரையில் ஏனைய அமர்வுகள் இடம்பெறும் என்றும்தெரிவித்தார்.